shadow

‘புலி’ படத்தின் ஹீரோயின் யார்? சர்ச்சையை கிளப்பிய நந்திதா

puliஇளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள புலி திரைப்படம் விரைவில் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நந்திதா ஸ்வேதா, சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘புலி’ படத்தின் நானும் ஹீரோயின் தான் என கூறியுள்ளார். எனவே இந்த படத்தின் இரண்டு ஹீரோயின்களான ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புலி படத்தில் நாயகிகளாக ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா நடித்துள்ள நிலையில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்துள்ள அட்டக்கத்தி நாயகி நந்திதா, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள என்னுடைய கேரக்டர்தான் படத்தின் கதைக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது. எனவே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று ஹீரோயின்களில் நானும் ஒருவர் என்று கூறியுள்ளார்.

நந்திதாவின் இந்த பேட்டி ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த பேட்டிக்கு பின்னால் இயக்குனர் மற்றும் விஜய் இருப்பார்களோ என்ற சந்தேகம் இருவருக்கும் ஏற்பட்டுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஏண்டி ஏண்டி என்ற பாடல் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. இந்த பாடலை விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் பாடியுள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார்.

Leave a Reply