shadow

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மாட்டேன்: டிடிவி தினகரன்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிமுக அமைச்சர்களுடன் டிடிவி தினகரனும் கலந்து கொள்வார் என அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மாட்டேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் அழைப்பிதழில் பெயர் இருப்பதால் விழாவில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அழைப்பிதழில் பெயர் சேர்த்திருப்பது அரசியல் செய்வதற்காகவே என்றும் தினகரன் தெரிவித்தார். அதிமுக அமைச்சர்களை அமமுகவில் சேர்க்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு அவ்வாறு சேர்த்தால் அதைவிட பாவம் ஒன்றும் இல்லை என டிடிவி தினகரன் பதலளித்தார்.

மேலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்பட பலர் கலந்து கொள்வதாக அழைப்பிதழில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் கலந்து கொள்வது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை

Leave a Reply