shadow

விஜய் படத்தில் நடிக்கவில்லை. மியா ஜார்ஜ்

miageorgeஇளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் அவருடைய அடுத்த படமான ‘விஜய் 60’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘அழகிய தமிழ்மகன்’ பரதன் இயக்கவுள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ‘இன்று நேற்று நாளை’ படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்த நடிகை மியா ஜார்ஜ் விஜய்க்கு தங்கையாக நடிப்பதாகவும், விஜய்க்கு ஜோடியாக நடிப்பதாகவும் டுவிட்டர் உள்பட பல்வேறு இணையதளங்களில் செய்திகள் வெளிவந்தது.

இதுகுறித்து மியா ஜார்ஜ் தற்போது விளக்கம் அளித்துள்ளார். விஜய் 60′ படத்தில் நான் நடிக்கவுள்ளதாக வந்த செய்தியில் உண்மையில்லை. என்னுடைய பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போலி டுவிட்டரில் யாரோ இந்த வதந்தியை பரப்பிவிட்டுள்ளனர். எனவே இதை யாரும் நம்ப வேண்டாம்’ என்று அவர் தெரிவித்துள்ளார். இதிலிருந்து விஜய் 60 படத்தில் மியா ஜார்ஜ் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

Leave a Reply