shadow

தமிழக பாஜக பதவியை நான் கேட்கவில்லையே! எஸ்.வி.சேகர்

தமிழக பாஜக தலைவர் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டால் நான் ஏற்றுக்கொள்வேன் என்றுதான் கூறினேனே தவிர, அந்த பதவி எனக்கு வேண்டும் என நான் கேட்கவே இல்லை என நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்

சமீபத்தில் தமிழக பாஜக பதவி கொடுத்தால் ஏற்றுக்கொள்வேன் என்றும் நான் பாஜக தலைவர் ஆனால் இப்போது பாஜகவுக்கு உள்ள வாக்கு சதவிகிதத்தை விட அதிக சதவிகிதத்தை என்னால் பெற்று கொடுக்க முடியும் என்றும் எஸ்.வி.சேகர் கூறியிருந்தார்

இதற்கு பதிலடி கொடுத்த தமிழக பாஜக தலைவர் ‘எஸ்வி சேகர் தனது நாடகத்தில் காமெடி செய்வது போல் இதையும் நினைத்து கூறியிருப்பார்’ என்று கூறியிருந்தார்

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டால் ஏற்றுக்கொள்வேன் என்றுதான் கூறினேனே தவிர, பதவி வேண்டும் என கேட்கவில்லை என சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

Leave a Reply