shadow

tamannaஷங்கருக்கு இணையான இயக்குனர் என கருதப்படும் பிரபல தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கியுள்ள ‘பாகுபாலி’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த  இந்த படத்தின் பிரஸ்மீட்டில் முதன்முதலாக பாகுபாலி’ படத்தை யாருக்கு போட்டு காட்டுவீர்கள் என்ற நிருபர்கள் இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களிடம் கேள்வி கேட்டபோது, அதற்கு பதில் கூறிய பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஆகிய மூவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குத்தான் முதலில் காண்பிப்போம் என்று சொல்லி வைத்தால்போல் கூறினர்.

ஆனால் தமன்னா மட்டும் வித்தியாசமான பதிலை கூறியுள்ளார். இந்த படத்தை நான் தான் முதன்முதலில் பார்ப்பேன். எனக்கு பின்னர்தான் ரஜினிசார் இந்த படத்தை பார்க்க அனுமதிப்பேன்’ என்று கூறியுள்ளார். தமன்னாவின் இந்த பதில் படக்குழுவினர்களுக்கு வியப்பை அளித்துள்ளது.

இந்த படத்தை முதன்முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினி பார்த்துவிட்டு என்ன கமெண்ட் சொல்லப்போகிறார் என்பதை படக்குழுவினர் மட்டுமின்றி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply