shadow

லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தவன் விஜய் ரசிகரா? திடுக்கிடும் தகவல்
VIJAY
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகனும், தற்போதைய நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இருக்கும் நாமல் ராஜபக்சே நேற்று தனது ஃபேஸ்புக்கில் தனது ஆதரவாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இதில் ஒருவர் விஜய்யின் புலி’ படம் குறித்து கருத்து கேட்டபோது, ‘தான் ஒரு தீவிர விஜய் ரசிகர் என்றும், விஜய் நடித்த ‘புலி’ படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

‘லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொலை செய்த, புலிகள் இயக்கத்தை அழித்த ஒருவர் ‘புலி’ படத்தை பார்க்க விரும்புவதாகவும் தன்னை ஒரு விஜய் ரசிகர் என்று கூறியுள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விஜய் ரசிகர்களும், அஜீத் ரசிகர்களும் காரசாரமாக டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற இணையதளங்களில் மோதி வருகின்றனர்.

Leave a Reply