shadow

4 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி தோல்வி. ஐதராபாத்துக்கு மேலும் ஒரு வெற்றி

Rising Pune Supergiants batsman Thisara Perera plays a shot during the 2016 Indian Premier League (IPL) Twenty20 cricket match between Rising Pune Supergiants and Sunrisers Hyderabad at Dr. Y.S. Rajasekhara Reddy ACA-VDCA Cricket Stadium in Visakhapatnam  on May 10, 2016. ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / AFP PHOTO / NOAH SEELAM / ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய விறுவிறுப்பான ஆட்டத்தில் புனே அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது.

நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது. தவான் 33 ரன்களும், வில்லியம்சன் 32 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர்.

138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய புனே அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 133 ரன்கள் மட்டுமே 4 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. பெய்லி 34 ரன்கள் எடுத்தார். தோனி 30 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனதே ஆட்டத்தின் திருப்புமுனைக்கு காரணமாக அமைந்தது.

இன்றைய ஆட்டம் மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

Leave a Reply