ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி. குஜராத்தை வீழ்த்தியது ஐதராபாத்

Shikhar Dhawan of Sunrisers Hyderabad sweeps a delivery during match 34 of the Vivo IPL 2016 (Indian Premier League) between the Sunrisers Hyderabad and the Gujarat Lions held at the Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad on the 6th May 2016 Photo by Shaun Roy / IPL/ SPORTZPICS

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரின் நேற்றைய ஆட்டத்தில் குஜராத் அணியை ஐதராபாத் அணி, ஐந்து விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, பேட்டிங்கில் சொதப்பியது. ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்களை இழந்து 79 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்து கொண்டிருந்த குஜராத் பின்னர் பின்ச்சின் அதிரடி ஆட்டம் காரணமாக 20 ஓவர்களில் 126 ரன்கள் எடுத்தது.

127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணி 19 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தவாண் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் எடுத்தார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *