shadow

டெல்லியை வீழ்த்தி முதலிடத்தை நெருங்கியது ஐதராபாத்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது உச்சகட்டத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று நடைபெற்ற போட்டி ஒன்றில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடைத்தை நெருங்கிவிட்டது.

நேற்று ஐதராபாத்தில் நடந்த போட்டியில் ஐதராபாத் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி தவான் மற்றும் வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தால் 191 ரன்கள் குவித்தது. தவான் 70 ரன்களும் வில்லியம்சன் 89 ரன்களும் எடுத்தனர்.

இந்தநிலையில் 192 என்ற இமாலய இலக்கை விரட்டிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தந்தது. 2வது ஓவரிலேயே நம்பிக்கை நட்சத்திரம் பில்லிங்ஸ் வீழ்ந்தார். இதன் பின்னர் எஸ்.எஸ்.ஐயர் மற்றும் சாம்சன் ஓரளவுக்கு நிலைத்து நின்று ஆடியபோதிலும் 20 ஓவர்களில் 176 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. வில்லியம்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

Leave a Reply