shadow

சென்னையுடன் இறுதி போட்டியில் மோதும் அணி எது? இன்று தகுதி சுற்று

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டது. வரும் ஞாயிறு அன்று நடைபெறவிருக்கும் இறுதி போட்டிக்கு சென்னை ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில் இன்று நடைபெறும் 2வது தகுதி சுற்றில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் சென்னையுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளும் சமமான பலம் வாய்ந்தவை என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த லீக் ஆட்டங்களில் தலா ஒன்று வீதம் வெற்றி பெற்றிருக்கின்றன.

இரு அணிகளின் உத்தேச வீரர்கள் குறித்த தகவல்

கொல்கத்தா: சுனில் நரின், கிறிஸ் லின், உத்தப்பா, நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (கேப்டன்), சுப்மான் கில், ஆந்த்ரே ரஸ்செல், ஜாவோன் சியர்லெஸ், பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

ஐதராபாத்: ஷிகர் தவான், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, வில்லியம்சன் (கேப்டன்), மனிஷ் பாண்டே, ‌ஷகிப் அல்–ஹசன், யூசுப் பதான், பிராத்வெய்ட், ரஷித்கான், புவனேஷ்வர்குமார், சித்தார்த் கவுல், சந்தீப் ‌ஷர்மா.

Leave a Reply