shadow

டொனால்ட் டிரம்புக்கு ஹங்கேரி பிரதமர் ஆதரவு

hungeryஉலகமே அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றது. அடுத்த அமெரிக்க அதிபரை தேர்வு செய்ய வரும் நவம்பரில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் வேட்பாளராக பிரபல தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அனைத்து கருத்துக்கணிப்புகளும் ஹிலாரிக்கு ஆதரவாக இருப்பதால் அவர் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஹங்கேரி நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன் டொனால்டு என்பவர் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஹிலாரி கிளிண்டனை விட, டிரம்ப் நல்ல தேர்வு என்றும் அவர் அமெரிக்க அதிபரானால் அமெரிக்காவுக்கு மட்டுமின்றி ஐரோப்பிய யூனியனுக்கு நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் தான் டொனல்ட் டிரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் நபர் அல்ல என்றும் ஐரோப்பியா, ஹங்கேரிக்கு டிரம்ப் ஒரு நல்ல தேர்வாக இருப்பார் என்பது தன்னுடைய தனிப்பட்ட கருத்து என்றும் அவர் கூறியுள்ளார். அகதிகள் நுழைவிற்கு கட்டுப்பாடு விதித்தல் குறித்து டொனால்ட் தெரிவித்த கருத்துக்கள் சிறந்த சிந்தனைகளாக உள்ளதாக ஹங்கேரி பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply