shadow
பாலியல் துன்புறுத்தல் குறித்து ‘காலா’ நாயகி கூறியது என்ன? 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தவர்களில் ஒருவர் ஹூமா குரேஷி. பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் இவர் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது பெண்கள் பாதுகாப்பு குறித்து கூறியதாவது: 
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. இருப்பினும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் பற்றி அவர்கள் பேச முற்படுவதில்லை. திரைப்படங்களில் நடிப்பவர்களை நாம் எப்படி காண்கிறோம்? என்றும் யோசிக்க வேண்டும். இது வீட்டில் இருந்தே தொடங்குகிறது.
ஒரு பெண் பாலியல் துன்புறுத்தல் பற்றி கூற முன்வருகிறார் எனில் அவரது நடத்தையில் குறை காணும் முயற்சியை நாம் தொடங்க கூடாது. மேலும் பாலிவுட் தொல்லை குறித்து மூத்த நடிகைகள் தைரியமாக பேச வேண்டும் என்று ஹூமா குரேஷி தெரிவித்தார்

Leave a Reply