shadow

rhino and zebra 1உயிருக்கு போராடும் மனிதர்களை சக மனிதர்களே காப்பாற்ற தயங்கும் இந்த உலகில் சேற்றில் விழுந்து உயிருக்கு போராட்டிய வரிக்குதிரையின் குட்டி ஒன்றை காண்டாமிருகம் ஒன்று காப்பாற்றிய சம்பவம் தென்னாப்பிரிக்காவில் நடந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வன விலங்குகள் புகைப்பட நிபுணர் ரோயல் வான் முய்தீன் என்பவர் சமீபத்தில் காடு ஒன்றில் புகைப்படம் எடுக்க சென்றிருந்தபோது, ஒரு அதிசய காட்சியை பார்த்தார். வரிக்குதிரை குட்டி ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக சேற்றில் இறங்கியபோது எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கிக்கொண்டது. சேற்றில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்துக்கொண்டிருந்த அந்த வரிக்குதிரை குட்டியை கண்ட அருகில் இருந்த காண்டாமிருக கூட்டத்தில் இருந்து ஒரே ஒரு காண்டாமிருகம் மட்டும் வரிக்குதிரையை சேற்றில் இறங்கி தனது கொம்பால் தூக்கி வெளியே போட்டது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1vWzESI” standard=”//www.youtube.com/v/Co0kkhtank4?fs=1″ vars=”ytid=Co0kkhtank4&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep4426″ /]

இதனால் துள்ளி குதித்த வரிக்குதிரை மீண்டும் சந்தோஷமாக ஓடிய காட்சியை அங்கிருந்த புகைப்பட நிபுணர் ரோயன் தன்னுடைய கேமராவில் படம் பிடித்தார். இந்த புகைப்படங்கள் தற்போது உலகம் முழுவதும் பெரும் பரபரப்புடன் இணையதளங்கள் மூலம் பரவி வருகிறது. நமது சென்னை டுடே வாசகர்களுக்காக நாமும் இந்த புகைப்படங்களை இங்கு பதிவு செய்துள்ளோம்.

 rhino and zebra 2 rhino and zebra 3 rhino and zebra 4 rhino and zebra

Leave a Reply