shadow

மியான்மரிலும் ஒரு ஓ.பன்னீர்செல்வம்
myanmar
மியான்மர் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆங்சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி 80 சதவீதத்துக்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அதிபர் வேட்பாளராக அவர் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆங்சான் சூகியின் இரண்டு மகன்களும் வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளதால் அவரால் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உதவியாளரான ஹ்தின் க்யாவை அதிபர் பதவிக்கு சூகி பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மியான்மர் நாட்டின் மேல்சபை, கீழ்சபை ஆகிய இரண்டிலும் தேசிய ஜனநாயக லீக் கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் ஹ்தின் க்யா அதிபராக தேர்வு செய்யப்படுவது உறுதி என கூறப்படுகிறது.

அடுத்த அதிபராகவுள்ள ஹ்தின் கியாவ் அவர்களுக்கு 69 வயது ஆகிறது. மியான்மர் நாட்டின் எழுத்தாளராகவும், முக்கிய ஜனநாயக ஆலோசகராகவும் உள்ள இவர் சூகியின் நம்பிக்கைக்குரியவர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறார். இருப்பினும் இவரால் சூகியை மீறி எதுவும் செய்ய முடியாது என்றே கூறப்படுகிறது. சுருக்கமாக சொன்னால் ஜெயலலிதாவுக்கு பதில் சில காலம் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தது மாதிரியே ஹ்தின் கியாவ் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply