shadow

காரை ஸ்டார் செய்வது எப்படி என்று ஓனரிடமே கேட்ட திருடன்

அமெரிக்காவில் உள்ள Minneapolis என்ற நகரில் வால்மார்ட் ஒன்றுக்கு வந்த பெண் ஓட்டி வந்த காரை வில்சன் என்பவர் தான் பார்க்கிங் செய்வதாக கூறி காரை பெற்று திடீரென திருடி சென்றுவிட்டார்.

பின்னர் ஓரிடத்தில் காரை நிறுத்திய வில்சன் மீண்டும் காரை ஸ்டார்ட் செய்தபோது கார் ஸ்டார்ட் ஆகவில்லை. அந்த காரை தான் உட்கார்ந்தால் மட்டுமே ஸ்டார்ட் ஆகும் வகையில் அந்த காரின் ஓனர் செட் செய்திருந்தார்.

இந்த நிலையில் காரை எப்படி ஸ்டார்ட் செய்வது என்று ஓனரிடமே போன் செய்து அந்த திருடன் கேட்டுள்ளார். இதனையடுத்து போலீசாரால் அந்த கார்த்திருடன் கைது செய்யப்பட்டான்.

ஒருமுறை காரை ஆஃப் செய்துவிட்டால் மீண்டும் காரின் ஓனர் உட்கார்ந்தால் மட்டுமே அந்த கார் ஸ்டார்ட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply