shadow

images

மற்றவர்களோடு உரையாடும்போது பற்களை சரியாக பாரமரிக்கவில்லையெனில் ஒருவித துர்நாற்றம் பற்களிருந்து வெளி வரும். பற்களில் துர்நாற்றம் வர காரணம்

1. பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருள்கள் படிதல்.

2. எச்சிலில் உள்ள ஆசிட், உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் சேர்ந்து பல்லில் சொத்தை ஏற்பட வாய்ப்புகள் உருவாகிறது.

3. பல் துலக்காமல் விடுதல்.

4. சத்துக்குறைபாடான உணவுகள், உடலில் ஏற்படும் சர்க்கரை உள்ளிட்ட மற்ற நோய்களின் காரணமாகவும் பல் ஆரோக்கியம் கெட்டுவிட வாய்ப்புகள் இருக்கிறது.

5. அதிக நாட்களாக பல் துலக்க பயன்படுத்தப்படும் பிரஷ்-ஆல் பல்லில் துர்நாற்றம் வர வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

பற்களை பாதுகாப்பது?

1. தினமும் காலை(பல் துலக்காமல் எந்த உணவையும் உண்ண வேண்டாம்) மற்றும் இரவு(உணவு உண்ட பின்) இரு நேரத்திலும் பல் துலக்க வேண்டும்.

2. சத்தான உணவுகளை (கால்சியம்)உட்கொள்ளுவதன் மூலம் பல் வலிமை அடைகிறது.

3. பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருள்கள் படிந்தால் வாய் கொப்பளித்து உடனடியாக பல்லை சுத்தம் செய்வது நல்லது.

4. மாதம் ஒரு முறை பல் துலக்கும் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.

5. அதிக குளிர்ச்சியுடைய குளிர்பானத்தை அடிக்கடி பகிர்வதை தவிர்ப்பது நல்லது.

6. வருடம் இரு முறை பல் மருத்துவரை சந்தித்து பல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

7. ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, பப்பாளி, திராட்சை இவற்றை சாப்பிட்டால் பற்கள் வலிமை பெரும். ஏனெனில் இவ்வகை பழங்களில் வைட்டமின்-சி உள்ளது.

Leave a Reply