shadow

pipsqueek-the-first-bluetooth-smartphone-for-kids-video-4a96716cce-350x250

இந்த ஆண்ட்ராய்ட் யுகத்தில், கையில் ஸ்மார்ட்போனுடன் இருக்கும் பிள்ளைகளைப் பார்த்தாலே பதறுகிறார்கள் பெற்றோர். அந்தளவுக்கு அதில் புதைந்திருக்கின்றன ஆபத்துகள். அதே சமயம், அவர்களிடம் இருந்து போனை பிரிக்க முடியாது எனும்போது, அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும்.

‘‘எந்த டெக்னாலஜி பிள்ளைகளை பாதை மாற்றும் என்று பதைபதைக்கிறோமோ, அதே டெக்னாலஜியில் உள்ள சில டூல்களையே அவர்களுக்குக் கடிவாளமாக்கலாம்!’’ என்கிறார், சென்னையை சேர்ந்த  சர்வீஸ் இன்ஜினீயர் சரவணன்…

‘‘ஸ்மார்ட்போனில் ‘ஆப் லாக்’ என்ற வசதியைப் பயன்படுத்துவதன் மூலம், மொபைலில் குழந்தைகளின் கவனத்துக்கு வரவேண்டாம் என்று நீங்கள் நினைக்கும் ஆப்கள் அனைத்தையும் லாக் செய்ய முடியும்.

மொபைலில் சர்ஃப் செய்கிறார்களா பிள்ளைகள்? இணையதள பகுதிக்குச் சென்று, ‘cookies’ என்பதை `disable’ என்று முடக்கலாம். இதனால், தேவையில்லாத தப்பான வெப்சைட்கள் அவர்களின் பார்வைக்கு வராது. அதேபோல், ஒவ்வொரு முறையும் உங்கள் பிள்ளைகள் ஸ்மார்ட்போனை பயன்படுத்திய பின், அவர்கள் இணையத்தில் என்னவெல்லாம் பார்த்திருக்கிறார்கள் என்பதை ‘ஹிஸ்டரி’க்கு சென்று கண்காணிக்கத் தவற வேண்டாம். கணினியில் மட்டுமல்ல, ஸ்மார்ட்போனிலும் இவற்றை பின்பற்றலாம்.

லேப்டாப்பில், ‘கெஸ்ட்’டுக்கென தனியாக ஒரு புரொஃபைல் உருவாக்குவது போல், இப்போது இருக்கும் லாலிபாப் போனிலும் ‘கெஸ்ட் மோட்’ (Guest Mode) ஆக்டிவேட் செய்ய முடியும். இதன் மூலம் குழந்தைகளை அத்தியாவசிய ஆப்ஸை மட்டுமே பயன்படுத்தச் செய்ய முடியும்.

கூகுல் பிளே ஸ்டோரில், குழந்தைகளுக்கு என இருக்கும் ஆப்ஸ்களை டவுன்லோடு செய்துகொடுக்கலாம். அதேபோல், அறிவுக்கு வேலை கொடுக்கும் வகையில் இருக்கும் இணைய கேம்ஸை அவர்களுக்கு போனில் டவுன்லோடு செய்து கொடுக்கலாம். இப்படி நல்ல பொழுதுபோக்கில் என்கேஜ்டாக இருக்கும்போது, இணையத்தின் நெகட்டிவ் பக்கங்களுக்கு அவர்கள் செல்வது தவிர்க்கப்படும்!’’ என்றார் சரவணன்.

‘‘குழந்தை அழுது அடம் பிடித்ததும் கையில் போனைக் கொடுத்துவிட்டு, வளர்ந்ததும் அது போனை பயன்படுத்தக்கூடாது என்று பெற்றோர் எதிர்பார்ப்பது அர்த்தமற்றது!’’ என்று சாடுகிறார், மனநல மருத்துவர் அசோகன். ‘‘ஒரு குழந்தை போனில் மூழ்கக் காரணம், தனிமை. பிள்ளைகளைத் தனிமையில் விடாதீர்கள். அவர்களுடன் நிறையப் பேசுங்கள். அவர் களுக்குப் பிடித்ததைப் பேசுங்கள். அந்த பேச்சின் ஊடே, இன்றைய கேட்ஜெட் உலகின் நன்மை, தீமைகளை, குறிப்பாக தீமைகளை நாசூக்காக எடுத்துச் சொல்லுங்கள். இண்டோர் கேம்ஸ், அவுட்டோர் கேம்ஸ் என்று அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். விளையாட்டின் ருசி தெரிந்துவிட்டால், போனில் தானாக அவர்களின் ஆர்வம் குறையும்!’’ என்று வழி சொன்னார் டாக்டர்.

Leave a Reply