shadow

சசிகலாவ நீக்க என்ன செய்ய வேண்டும்?

அதிமுகவின் இரு அணிகள் இணையவேண்டுமானால் ஜெயலலிதா மரணத்தை விசாரணை செய்ய கமிஷன் மற்றும் சசிகலாவும் அவருடைய குடும்பத்தினர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற இரு நிபந்தனைகளை ஓபிஎஸ் தரப்பு வைத்தது. இதில் முதல் கோரிக்கை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கை இன்று நடைபெறும் என தெரிகிறது’

அதிமுக பொதுக்குழு கூடி சசிகலாவை தற்காலிக பொதுசெயலாளராக நியமித்துள்ளதால் முறைப்படி மீண்டும் பொதுக்கூழு கூடி அவரை நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது. இதற்காக, ஓபிஎஸ் தலைமையில் கட்சியின் வழிகாட்டும் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் இக்குழுவின் துணைத்தலைவராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பார் என்றும் ஓபிஎஸ் அணியில் உள்ள கே.பி.முனுசாமியும் எடப்பாடி அணியில் உள்ள வைத்தியலிங்கமும் இணைத்தலைவர்களாக இருப்பார்கள் என்ரும் தெரியவந்துள்ளது.

இந்த குழுவினர் கூடி ஆலோசித்து பொதுக்கூழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும். பின்னர் கூடும் பொதுக்குழுவில் சசிகலாவை முறைப்படி பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்படும். இதற்காக, இன்று இணைப்புக்குப் பின் நடைபெறும் கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகளில் மாற்றம் மேற்கொள்ளப்படும்.

சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதும் அடுத்த பொதுச்செயலாளராக ஓபிஎஸ் நியமிக்கப்படுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதிமுக அம்மா அணியினர் ஜெயலலிதாவுக்குப் பிறகு வேறு யாரையும் பொதுசெயலாளர் பதவியையில் வைத்துப்பார்க்க விரும்பவில்லை என்று கூறிவருகின்றனர். இதனால், எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அதிமுக தலைவர் பதவியில் யாரும் நியமிக்கப்படாமல் உள்ளதைப் போல, பொதுச்செயலாளர் பதவியும் ஜெயலலிதாவுக்குப் பிறகு கைவிடப்படும் என்று கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக, வழிகாட்டும் குழு கட்சியை வழிநடத்தும் என்றும் கருதப்படுகிறது.

Leave a Reply