பெட்ரோல் விலை ரூ20, வரி ரூ.50: இந்தியாவில் இதுதான் நிலைமை!

மார்ச் 1-ம் தேதி நிலவரத்தின்படி, கச்சா எண்ணெய்யின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.17.79. மேலும் நுழைவுக் கட்டணம், சுத்திகரிப்பு, தரையிறக்கும் செலவ ரூ.13.91, மத்திய அரசின் கலால் வரி மற்றும் சாலை வரி ரூ.19.98. பெட்ரோல் பம்ப் டீலர்களுக்கான கமிசன் ரூ.3.55. மதிப்புக் கூட்டு வரி ரூ.14.91. இறுதி செய்யப்பட்ட 1 லிட்டர் பெட்ரோலின் சில்லறை விற்பனை விலை = ரூ.70.14.

இதில் இருந்து ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 52.35 ரூபாய் வரியை ஒவ்வொரு இந்தியரும் கட்டி வருகிறோம்.

2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 101.14 டாலர்களாக இருந்த போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான மத்திய அரசின் கலால் வரி ரூபாய் 9.48 என்பதும் தற்போது 22.98 ரூபாய் கலால் வரி கட்டுகிறோம் என்பதும், கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 13.5 ரூபாய் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply