டெல்லி மத மாநாட்டில்  கலந்து கொண்டவர்கள் எத்தனை பேர்? முதல் இடத்தை பிடித்த தமிழகம்

டெல்லியில் மத வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த மாநாட்டில் தமிழகத்திலிருந்து 501 பேர்களும், அஸ்ஸாமிலிருந்து 216 பேர்களும், உத்தரப்பிரதேசத்திலிருந்து 156 பேர்களும், மகாராஷ்டிராவிலிருந்து 109 பேர்களும், மத்திய பிரதேசத்திலிருந்து 107 பேர்களும், கலந்து கொண்டனர்.

அதேபோல் பீகாரில் இருந்து 86 பேர்களும், தெலுங்கானாவிலிருந்து 55 பேர்களும், ஜார்க்கண்டிலிருந்து 46 பேர்களும், கர்நாடகாவிலிருந்து 45 பேர்களும், உத்தரகண்ட்டிலிருந்து 34 பேர்களும், அந்தமானிலிருந்து 21 பேர்களும், ராஜஸ்தானிலிருந்து 19 பேர்களும், இமாச்சல பிரதேசம், கேரளா, ஒடிஸாவிலிருந்து தலா 15 பேர்களும், பஞ்சாபிலிருந்து 9 பேர்களும், மேகாலயாவிலிருந்து 5 பேர்களும், கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த மத வழிபாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

Leave a Reply