shadow

மெடல்களுக்காக பிஞ்சு குழந்தைகளை கொடுமைப்படுத்தும் சீன பயிற்சியாளர்கள்

chinaவிளையாட்டு துறையில் பல மெடல்கள் வாங்கி குவிக்க வேண்டும் என்பதற்காக சீனாவில் குழந்தை பருவத்தில் இருந்தே கடுமையான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இந்த பயிற்சிகள் சிலசமயம் எல்லை மீறியுள்ளதாகவும் மனிதநேயம் இல்லாமல் குழந்தைகளை பயிற்சியாளர்கள் கொடுமைப்படுத்துவதாகவும் மனித உரிமை ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்றும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் விளையாட்டுத்துறையில் முதலிடத்தை பிடிக்கும் வெறியிலும், ஒலிம்பிக்கில் தங்கப்பதங்கங்களை குவிக்க வேண்டும் என்ற ஆசையிலும் பிஞ்சுக் குழந்தைகளை கொடூரமான முறையில் சித்ரவதைப்படுத்தி வரும் சீன தடகள பயிற்சியாளர்களின் கோரமுகம் தற்போது வீடியோ வடிவில் உலக நாடுகளுக்கு தெரிய வந்துள்ளது.

குறிப்பாக இந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கு வீரர்களுக்கு கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக இந்த ஆண்டு ஏராளமான பதக்கங்கள் சீனாவுக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

பதக்கங்களுக்காக பிஞ்சு குழந்தைகளை வதைக்கும் சீன பயிற்சியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply