ஆதார் அட்டை அவசியம் கேட்பது ஏன்? சுப்ரீம் கோர்ட் கண்டனத்திற்கு மத்திய அரசு பதில்

ரேசன் கார்டு, பான்கார்டு, வங்கிக்கணக்கு, பாஸ்போர்ட் உள்பட அனைத்தையும் ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளால் கட்டாயப்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் தனது கண்டனங்கலை பதிவு செய்துள்ளது.

மத்திய அரசின் சேவைகள் மற்றும் நலத்திட்டங்களில் பலன்பெற ஆதார் எண் கட்டாயம் இல்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தும் இன்னும் பல சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயம் கேட்கப்படுவதால் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில், வருமான வரிக்கணக்கு சமர்ப்பிக்கவும், இதர மத்திய அரசின் சேவைகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாகக் கோரப்பட்டு வருகிறது. இதனால், உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதுபற்றி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கிக்கு நோட்டீஸ் அனுப்பி கண்டனம் தெரிவித்துள்ள நீதிபதிகள் அமர்வு, ‘’வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதில் தொடங்கி, பலவித மத்திய அரசின் சேவைகளுக்கு, ஆதார் எண்ணை கட்டாயப்படுத்துவது ஏன்? அதனால், என்ன நன்மை ஏற்படப்போகிறது. வருமான வரிக்கணக்கு விவகாரத்தில், பான் கார்டு கேட்டால் நியாயம் உள்ளது. ஆதார் எண் ஏன் கேட்கறீர்கள்,’’ எனக் கண்டித்துள்ளது.

இதற்கு பதில் கூறிய மத்திய அரசின் வழக்கறிஞர், ‘ஆதார் எண் அனைவருக்கும் ஒன்று மட்டுமே உள்ளது. ஆனால், போலியான பான் கார்டுகளை வைத்துப் பலர் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்றனர். அதைச் சமாளிக்கவே இந்த நடவடிக்கை,’’ எனத் தெரிவித்தார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *