நடிகை கல்பனா இறந்தது எப்படி? புதிய தகவல்கள்

kalpanaகே.பாக்யராஜ் இயக்கிய ‘சின்ன வீடு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கல்பனா இன்று காலை திடீரென ஐதராபாத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் மரணம் அடைந்துள்ளார். அவர் நேற்று நடைபெற்ற IIFA விழாவில் கலந்து கொள்ள ஐதரபாத் சென்றதாகவும், அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஓட்டல் அறையில் தங்கிய அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

ஓட்டல் அறை ஊழியர்கள் இன்று சுத்தம் செய்ய அவரது அறைக்கு சென்றபோது அவர் மயக்க நிலையில் இருந்ததாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு அவரை எடுத்து சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதய வால்வு பிரச்சனை, கல்லீரல் பிரச்சனை ஆகிய நோய்களுடன் இருந்த கல்பனாவுடன் யாராவது ஒருவர் அறையில் இருந்திருந்தால் மாரடைப்பு ஏற்பட்ட உடனே மருத்துவமனைக்கு எடுத்து சென்று அவருடைய உயிரை காப்பாற்றியிருக்கலாம் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.

சின்ன வீடு, சதிலீலாவதி, பம்மல் கே.சம்பந்தம் போன்ற பல படங்களில் நகைச்சுவை நடிப்பால் அனைவரையும் கவர்ந்த கல்பனா இன்று இல்லை என்பது நகைச்சுவை ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு வேதனையான விஷயம்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *