shadow

house rateஉலக நாடுகளில் நடைபெறும் ரியல் எஸ்டேட் எனப்படும் வீடு, மனை வாங்கி விற்கும் தொழிலில் வீடுகளின் விற்பனை விலை இந்தியாவில் தான் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்தியச் சந்தைகளில் விற்பனையாகும் வீடுகளின் விலை 9.1 சதவீத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மேலும், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸ், இத்தாலி, சைப்ரஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடும் போது இந்த விலை வீழ்ச்சி சதவீதம் இந்தியாவில் அதிகம் என்றும், அதே நேரத்தில் அயர்லாந்தில் வீட்டு விற்பனை விலை 4.3 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 52 நாடுகளில் இந்தியா உள்பட 19 நாடுகளில் தான் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply