தமிழக அரசு அறிவிப்பு

வீட்டு வேலை பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம் என்ற தளர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மாநில பேரிடர்‌ மேலாண்மை சட்டத்தின்‌ கீழ்‌ ஊரடங்கு உத்தரவினை 04.05.2020 முதல்‌ 17.05.2020 நள்ளிரவு 12.00 மணி வரை சில தளர்வுகளுடன்‌ நீட்டிப்பு செய்ததன்‌ அடிப்படையில்‌
03.05.2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில்‌ வீட்டு வேலை பணியாளர்கள்‌ சென்னை மாநகராட்சி ஆணையர்‌ மற்றும்‌ சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம்‌ உரிய அனுமதி பெற்று பணி புரிய அனுமதிக்கப்பட்டு இருந்தது

தற்போது, பொதுநலன்‌ கருதி 04.05.2020 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில்‌ வீட்டு வேலைப்‌ பணியாளர்களுக்கு பணி புரிய வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது. ஆகவே, வீட்டு வேலை செய்யும்‌ பணியாளர்கள்‌ 17.05.2020 நள்ளிரவு ஊரடங்கு முடியும்‌ வரை தாங்கள்‌ பணி புரியும்‌ வீடுகளுக்கு செல்லாமல்‌ அவரவர்‌ வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply