shadow

ஓட்டல்களை அடுத்து மருந்துக்கடைகளும் மே 30ஆம் தேதி வேலைநிறுத்தம்

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பை கண்டித்து இம்மாதம் 30ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தப்போவதாக தமிழ்நாட்டு உணவகங்கள் சங்கத்தின் தலைவர் எம்.வெங்கடசுப்பு கூறியுள்ளார். இதனால் அன்றைய தினம் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டிருக்கும். இதுவரை 5 சதவீதமாக இருந்த வரி, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மூலம் 18 சதவீதம் வரை உயர்வதால், உணவுப்பொருட்களின் விலையை அதிகரித்து விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த போராட்டத்தை நடத்தவுள்ளதாகவும் ஓட்டல்கல் சங்கம் அறிவித்துள்ளது

இதேபோல் மத்திய அரசின் ஆன்லைன் மருந்து விற்பனை சட்டத்தை எதிர்த்து மருந்து வணிகர்கள் அதே 30ம் தேதி தேசிய அளவிலான வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால் அன்றைய தினம் நாடு முழுவதிலும் உள்ள மருந்துக்கடைகள் அடைக்கப்படும் என தெரிகிறது.

ஓட்டல்கள், மருந்துக்கடைகளை அடுத்து இன்னும் சில வணிகர்கள் சங்கமும் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளது குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் மிக விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply