shadow

shutterstock_47554147-350x250

தேவையான பொருட்கள் :

கற்பூரவல்லிதழை – 10 இலைகள்
தேன் – சுவைக்கு
வெற்றிலை – 1
மிளகு – 5 முதல் 10 வரை
துளசி – 10 இலைகள்
நெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை: கற்பூரவல்லி, துளசி, காம்பு மற்றும் நடுநரம்பு நீக்கிய வெற்றிலை இலைகளை துண்டுகளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை வாணலியில் விட்டு துண்டுகளாக்கப்பட்ட மூன்று இலைகளையும், மிளகையும் போட்டு நன்கு வதக்க வேண்டும். வதங்கிய கலவையை தண்ணீர் விட்டு துவையலாக அரைக்க வேண்டும்.

அதனுடன் தேவைப்படும் அளவு தேன் சேர்த்து பாலாடை மூலம் குழந்தைகளுக்கு வழங்கினால், குழந்தையின் நெஞ்சில் கட்டிய சளியும், கோழையும் சுத்தமாக கரைந்து வெளியேறி விடும். மிக எளிதில் கிடைக்கும் மேற்கண்ட மூலிகைகளை பயன்படுத்தி குழந்தைகளுக்கு பக்க விளைவில்லா மருந்தை வழங்கி சளித் தொல்லையை போக்குவோம்.

Leave a Reply