shadow

3 முறை ஆஸ்கார் விருது வென்ற கலைஞருடன் இணையும் விஜய்சேதுபதி

கவண், விக்ரம் வேதா, புரியாத புதிர் ஆகிய படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் செய்த விஜய்சேதுபதி வரும் 29ஆம் தேதி ‘கருப்பன்’ படத்தையும் ரிலீஸ் செய்யவுள்ளார்.

இந்த நிலையில் அவர் நடித்து வரும் பல படங்களில் ஒன்று ‘சீதக்காதி. இந்த படத்தில் அவர் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கின்றார். குறிப்பாக அதில் 70 வயது முதியவரின் தோற்றம் படம் முழுவதும் வரும் முக்கிய கேரக்டர்

இந்த கேரக்டருக்காக மேக்கப் செய்ய ஹாலிவுட் மேக்கப்மேன் கிரேக் கேனான் வரவழைக்கப்பட்டிருக்கின்றார். இவர் மூன்றுமுறை ஆஸ்கார் விருதினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply