shadow

sivakarthikeyanவளர்ந்து வரும் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தில் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கவிருப்பதாகவும், அதில் ஒரு வேடம் அவ்வை சண்முகி படத்தில் கமல் ஏற்ற பெண் வேடமும் ஒன்று என்றும் கூறப்படுகிறது. மற்ற இரண்டு கெட்டப்புகள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நீண்டநாள் நண்பர் ராஜா என்பவர் தயாரிக்கின்றார். அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் இயக்கும் இந்த படத்தில் ரசூல் பூக்குட்டி, பி.சி.ஸ்ரீராம், அனிருத் உள்பட பல பிரபலங்கள் பணிபுரியவுள்ளனர்.

முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாக்கபப்ட்டுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா அல்லது சமந்தா நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மேக்கப் போட ஹாலிவுட்டில் இருந்து ஷான் ஃபுட் என்ற பிரபல மேக்கப் கலைஞர் வரவுள்ளார். இவர் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply