shadow

ரியோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணிக்கு முதல் வெற்றி

hockeyபிரேசில் நாட்டின் ரியோ நகரில் நேற்று பிரமாண்ட கலை நிகழ்ச்சியுடன் தொடங்கிய ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற ஆடவர்களுக்கான ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி, அயர்லாந்து அணியை 3-க்கு 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

பி பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய மற்றும் அயர்லாந்து அணிகள் நேற்று மோதின. இந்த ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் இந்திய வீரர் ரகுநாத் ஒரு கோலும், ஆட்டத்தின் 26 மற்றும் 48 வது நிமிடங்களில் இந்திய வீரர்கள் ருபீந்தர் சிங், பால்சிங் ஆகியோர் அடுத்தடுத்து இரண்டு கோல்களும் போட்டனர்.

ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 44 மற்றும் 55 வது நிமிடங்களில் அயர்லாந்து அணியின் ஜான் ஜெர்மின், கோனர் ஹார்டே ஆகியோர் இரண்டு கோல்கள் போட்டாலும் இறுதியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ரியோ ஒலிம்பிக்கில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

மேலும் டென்னிஸ் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் – ரோகன் போபண்ணா ஜோடி, போலந்து நாட்டின் லுகாஸ் குபோட் மற்றும் மார்கின் மட்கோவ்ஸ்கி இணையுடன் மோதி 6-4, 7-6 என்ற செட்களில் இணை தோல்வி அடைந்தது.

Leave a Reply