1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் தோல்வி அடைந்தவுடன் ஜெர்மனியின் சர்வாதிகார ஆட்சியாளர் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதாக வரலாறு இதுவரை கூறிவந்துள்ளது.

ஆனால் தற்போது சிமோனி ரினீ  என்ற எழுத்தாளர் ஹிட்லர் தற்கொலை நாடகம் நடத்திவிட்டு தப்பியோடி விட்டதாகவும், அதன்பின்னர் அவர் கருப்பின காதலி ஒருவருடன் பல வருடங்கள் வாழ்ந்து தனது 95வது வயதில் 1984இல் தான் உயிரிழந்தார் எனவும் கூறியுள்ளார்.

இதனால் உலகம் முழுவதிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1945ல் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததும் தற்கொலை நாடகம் நடத்திய ஹிட்லர், சுரங்கப்பாதை வழியாக தப்பியோடி பிரேசில் நாட்டில் நீண்ட காலம் தலைமறைவாக வாழ்ந்ததாக அந்த எழுத்தாளர் பல படங்களுடன் ஆதாரபூர்வமாக எழுதியுள்ளார்.

ஹிட்லர் தனது தலைமறைவு வாழ்க்கையில் மீசையை எடுத்துவிட்டு, கருப்பின காதலி ஒருவருடன் வாழ்ந்து வந்ததாக, அவர் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். ஹிட்லர் பயன்படுத்திய உடைகள் மற்றும் அவருடைய புகைப்படங்களும் அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply