shadow

காதல் திருமணம் செய்த ஜோடிக்கு ரூ.17 லட்சம் அபராதம். பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு

வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் காதலர்களுக்கு ரூ.17 லட்சம் அபாரதம் விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது

பாகிஸ்தானை சேர்ந்த  சிந்து மாகாணத்தின் கந்த்கோட்-காஷ்மோர் மாவட்டம் தங்வானி அருகேயுள்ள பஜர் அபாத் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் தனக்கு மனதுக்கு பிடித்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்

இந்த திருமணத்தால் தங்களுக்கு சமுதாயத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டதாக மணப்பெண்ணின் வீட்டார்  வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த திமன்றம் என்று கூறப்படும் “ஜிர்கா’ நேற்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பில் கட்டுப்பாடுகளை மீறி திருமணம் செய்து கொண்ட காதலர்கள் குற்றவாளி என தீர்ப்பளித்தோடு. அந்த ஜோடியை மூன்று மாதங்களுக்கு கிராமத்தைவிட்டு விலக்கி வைக்குமாறு உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி இந்த ஜோடியினர் பெண்ணின் பெற்றோர்களுக்கு நஷ்ட ஈடாக ரூ.17 லட்சத்தை காதலர்கள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு காதலர்களுக்கு எதிரானது என்று பாகிஸ்தான் கருத்து பரவி வருகிறது.

Leave a Reply