shadow

பாகிஸ்தான் வரலாற்றில் முதல் மேல்சபை உறுப்பினரான இந்துமத பெண்

பாகிஸ்தானில் 20 கோடி பேர் வாழ்ந்து வந்தபோதிலும் அங்கு பிற மதத்தவர்கள் வெறும் 3.6% மட்டுமே உள்ளனர். மேலும் சிறுபான்மையினர் அங்கு கடின வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக பிற மதத்டவர்களுக்கு அரசியல் பிரதிநித்துவம் மறுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டு வரும் பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மேல்சபை எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ன குமாரி கோல்ஹி என்ற 39 வயது இந்து பெண் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் கடந்த சில வருடங்களாக உள்ளார். இவர் பாகிஸ்தான் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மேல்சபை தேர்வில் அவரது கட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

20 கோடி மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தான், முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடாக விளங்கி வருகிறது. இங்கு 3.6% பேர் இதர மதத்தைச் சேர்ந்தவர்களாக வசித்து வருகின்றனர். சிறுபான்மையினராக உள்ள பிற மதத்தவர்கள் அங்கு கடின வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. கிருஷ்ன குமாரிக்கு கிடைத்த இந்த வெற்றி சிறுபான்மை சமூகத்திற்கும், பெண்களின் மேம்பாட்டிற்கும் கிடைத்த அங்கீகாரம் என அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி இந்தியாவில் இருந்தும் பாராட்டுக்கள் கிடைத்துள்ளது.

சிந்து பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுநிலை பட்டம் பெற்றா கிருஷ்ணகுமாரி பாகிஸ்தான் பிரிவுக்கு முன் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி கைது செய்யப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர் ரூப்ளோ கோல்ஹியின் வம்சாவளி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply