shadow

11817068_767652486674121_552877818178915764_n

வானசாஸ்திரம்,அர்த்தசாஸ்திரம்,தர்ம சாஸ்திரம்,யோகசாஸ்திரம்,வாஸ்து சாஸ்திரம், அக்ஷர-லக்க்ஷா சாஸ்திரம்,சித்திர கர்ம சாஸ்திரம்,கஜ சாஸ்திரம்,கால நிர்ணய சாஸ்திரம்,லக்ஷன சாஸ்திரம்,சகுன சாஸ்திரம்,மலினி சாஸ்திரம்,,மள்ள சாஸ்திரம், மகேந்திர-ஜாலம் சாஸ்திரம்,பிரகா ப்ரவேஷ் சாஸ்திரம்,ரத்ன பரிக்க்ஷ-கனக பரிக்க்ஷ சாஸ்திரம், சபத்த சாஸ்திரம்,சாமுந்திரிக்க சாஸ்திரம் என்று இன்னும் பல சாஸ்திரங்கள் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கு. இதெல்லாம் எதை குறிக்கிறது ஒரு மனித குழுவிற்கு வாழ்வியல் முறையை வகுத்து கொடுக்கிற manual guide .

அன்றைய காலகட்டத்திற்க்கான தேவையான வாழ்வியல் முறையை மிக விரிவாக சொல்லியிருகிறார்கள் நமது முன்னோர்கள் !

எதுக்கு சொல்ல வரேன் என்றால் இத்தனை சாஸ்திரங்களும் ஒவ்வொரு துறையை சார்ந்த சாஸ்திரங்கள் ! அப்படிதான் இந்த “காம சாஸ்திரமும்” ஆனால் இங்கே இருக்கும். கால் குட, அரைகுட நடுநிலை நக்கிகள்.காமத்தை மட்டுமே போதிக்கிற மதமாக இதை முன்னிறுத்த இவர்கள் கையில் எடுத்தது இந்த காமசாஸ்திரத்தை !

எங்களுக்கு வான சாஸ்திரம் முதல் காமசாஸ்திரம் வரை மனித வாழ்வியலுக்கு தேவையானவைகளை எங்களது முன்னோர் கொடுத்து விட்டு சென்று உள்ளனர் !

இதை செய்தால் இப்படியான விடை வரும் என்றோடு நிறுத்திக்கொண்டுள்ளார்கள் எமது முன்னோர்கள், அப்படி செய்தால் சிவனோ பெருமாளோ மன்னிக்க மாட்டான் என்று பயம் கொள்ள செய்து அடிமையாக வைக்கவில்லை.

இன்னொன்று. ஏசு பிறக்கும் முன் கட்டப்பட்ட கோவில்கள் கூட இந்தியாவில் உண்டு. அக்காலத்தில் ஜாக்கெட் இல்லை. காலத்திற்கு தகுந்தார் போல் உடை, உணவு என அனைத்திலுமே கலாச்சாரங்கள் மாறும். இன்று போல் அன்று நாகரிக உடை கண்டு பிடிக்காத காலங்களில் மக்கள் அவ்வாறு உடை அணிந்தார்கள்.

மனதிலே எந்தவித குற்ற உணர்வும் இல்லாதவனுக்கு. பெண்ணின் மார்பகம், கட்டை விரல் இரண்டுமே ஒன்று தான்.

சில நாட்களுக்கு முன் இது சம்பந்தமாக. சில பிரகஸ்பதிகள். ஒரு பிரபல தொலைகாட்சியில் அவதூராக பேசினார்கள். அதே விவாதத்தில் கலந்து கொண்ட. ஹிந்து அமைப்பினர். அதர்க்கு சொதப்பலான பதிலை சொல்லி. நமது மானத்தை வாங்கினர். ஒருகால். நான் அந்த விவாதத்தில் கலந்து கொண்டிருந்தால். கிழி, கிழினு கிழித்து இருப்பேன்

Leave a Reply