shadow

hindu
“பெண்களுக்கு தாலி தேவையா? தேவையில்லையா? என்பது குறித்து சிறப்பு விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்த முயற்சி செய்த புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் சிறிய அளவில் வன்முறையாக மாறியதை அடுத்து போராட்டக்காரர்கள் பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.

மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக பெண்களுக்கு தாலி தேவையா? இல்லையா?’ என்ற தலைப்பில் சிறப்பு விவாதம் ஒன்றை ஒளிபரப்புவதாக புதிய தொலைக்காட்சி நிறுவனம்  அறிவித்ததால் கடும் அதிர்ச்சியான இந்து அமைப்புகள்  இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, நிகழ்ச்சியை தடை செய்யும்படி வலியுறுத்தி வந்தன.

மேலும் இந்து அமைப்பை சேர்ந்த பலர் தொலைக்காட்சி அலுவலகம் முன் குவிந்து திடீரென முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் செந்தில்குமரன், வீடியோவில் பதிவு செய்ததால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், அவரது கேமராவை பறித்து தரையில் வீசி உடைத்தனர். மேலும் ஒளிப்பதிவாளரையும் அவரது அருகில் இருந்த பெண் நிருபர் ஒருவரையும் போராட்டக்காரர்கள் தாக்க முயன்றனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், போராட்டக்காரர்கள் 10 பேரை கைது செய்தனர். தொடர்ந்து தொலைக்காட்சி நிறுவன அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்து அமைப்புகளின் போராட்டத்தை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தொலைக்காட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply