shadow

ஹிலாரி -டிரம்ப் மோதும் நேரடி விவாதம். இன்று நடைபெறுகிறது

1அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதை அடுத்து அங்கு வரும் நவம்பர் 8ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

இருதரப்பினர்களும் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் இரு வேட்பாளர்களும் நேருக்கு நேர் விவாதம் செய்யும் ந்டைமுறை உள்ளது. இந்த விவாதம் நாளை நடைபெறவுள்ளது.

4 கட்டங்களாக நடைபெற உள்ள இந்த விவாதத்தின் முதல்கட்டம் இன்று திங்கட்கிழமை நியூயார்க்கில் உள்ள ஹோப்ஸ்டரா பல்கலைக்கழகத்தில் இரவு 9 முதல் 10.30 மணி வரை நடக்கிறது.

இந்த விவாதத்தில் இரு வேட்பாளர்களும் அமெரிக்காவின் நிலை, செயல்படுத்த உள்ள திட்டங்கள், அமெரிக்க பாதுகாப்பு ஆகிய 3 தலைப்புகளின் கீழ் நேரடியாக பேசி கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

ஹிலாரி-டிரம்ப் மோதும் நேரடி விவாதம் அமெரிக்க டெலிவி‌ஷன்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. அதை அமெரிக்க மற்றும் சர்வதேச நாடுகளை சேர்ந்த 10 கோடி மக்கள் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவாதத்தின் மூலம் யாருக்கு ஓட்டு போடுவது என ஊசலாட்டத்தில் இருக்கும் அமெரிக்க வாக்காளர்கள் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும் என கருதப்படுகிறது.

Leave a Reply