shadow

விரைவில் அதிபர் ஆவாரா மிச்சேல் ஒபாமா? ஆச்சரியமான செய்தி

michelle obamaஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்பார் என்று கூறப்படும் நிலையில் அவருடைய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பை தற்போதைய அதிபரின் மனைவி மிச்சேல் ஒபாமா இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஹிலாரி கிளிண்டன் பேட்டி ஒன்றில் கூறுகையில், “நான் அதிபராக தேர்தெடுக்கப்பட்டால் எனது அமைச்சரவையில் மிச்செல் ஒபாமா கண்டிப்பாக இருப்பார்.
கடந்த 8 வருடங்களில் மிச்செல் ஒபாமா ஆற்றிய பணி சிறப்பானது. அவரது பணிகள் என்னைக் கவர்ந்து விட்டன. அவர் ஒரு முன்மாதிரி. அவரது தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் பாராட்டுகிறேன்” என்று கூறினார்.

ஒபாமாவின் அமைச்சரவையில் இருந்த ஹிலாரி தற்போது அதிபர் ஆகவுள்ளதை அடுத்து மிச்சேல் ஒபாமாவும் விரைவில் அதிபர் ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply