shadow

ஒபாமாவின் முக்கிய முடிவுக்கு ஹிலாரி கிளிண்டன் எதிர்ப்பு
hilari
அமெரிக்க அதிபர் பராக் ஒபாவின் தீவிர முயற்சி ஒன்றுக்கு அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள ஹிலாரி கிளிண்டன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பசிபிக் நாடுகளான கனடா, மெக்சிகோ, பெரு, சிலி, ஜப்பான், வியட்நாம், புருனே, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த 5ஆம் தேதி தாராள வர்த்தக உடன்பாடு  ஒன்று ஏற்பட்டது. இந்த உடன்பாடு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தீவிர முயற்சியால்தான் இந்த உடன்பாடு கையெழுத்தானதாக கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் 12 நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தகத்துக்கு வாய்ப்பாக அமைவதால் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வேலைவாய்ப்பினை பெருக்கும் என்றும், விரைவான நிலையான வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என கருதப்படுகிறது.

ஆனால் இந்த ஒப்பந்தத்துக்கு, அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரியும், அடுத்த தேர்தலின் அமெரிக்க அதிபருமான ஹிலாரி கிளிண்டன் எதிர்ப்பு தெரிவித்து, போர்க்கொடி தூக்கி உள்ளார்.

இது தொடர்பாக இயோவா மாகாணத்தில், மவுண்ட் வெர்னான் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு இடையே அளித்த பேட்டியில் ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது, “இன்றைய நிலவரப்படி, பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்துக்கு எனது ஆதரவு இல்லை. நான் நிச்சயித்திருக்கிற உயர்ந்தபட்ச குறிக்கோளை எட்டுவதற்கு இந்த உடன்பாடு ஏற்றது என நான் நம்பவில்லை” என கூறினார். மேலும் அவர் கூறுகையில், “அமெரிக்க மக்களுக்கு வேலைவாய்ப்பினை பெருக்குகிற, சம்பளத்தை உயர்த்துகிற, தேச பாதுகாப்பை முன்னேற்றுகிற வகையிலான வர்த்தக உடன்பாடுதான் வேண்டும் என்று நான் ஆரம்பம் முதலே கூறி வருகிறேன்” என குறிப்பிட்டார்.

ஒபாமா எடுத்த முடிவு ஒன்றுக்கு ஹிலாரி கிளிண்டன் எதிர்ப்பு தெரிவிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply