shadow

hilaryவரும் 2016ஆம் ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளின்டன் போட்டியிட போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நேற்று  அயோவா மாகாண எம்.பி. ஹார்கின்ஸ் என்பவர் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இதற்கான விழா ஒன்று இண்டியானோலா நகரில் சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் ஹிலாரி கிளின்டன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது பெரும்பாலும் இந்த தொகுதியில் இருந்துதான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம், 2016-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளின்டன் தயாராகி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹிலாரி கிளிண்டன் அதிபர் தேர்தலில் போட்டியிட முழு ஆதரவு தருவதாக அவரது ஜனநாயகக் கட்சியின் அரசியல் நடவடிக்கைக் குழு,தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, கடந்த 2008-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி, மூன்றாவது இடத்தில் இருந்தார் என்பது அனைவரும் தெரிந்ததே.

Leave a Reply