இந்திய பயணத்தில் ஹிலாரியின் எலும்பு முறிந்ததா? அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்த ஹிலாரி கிளிண்டன், கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்தபோது அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் எப்படி தோல்வி அடைந்தேன் என்பதையும் டிரம்ப் எப்படி வெற்றி பெற்றார் என்ற என்பதையும் விளக்கி ஹிலாரி கிளிண்டன் புத்தகம் ஒன்றை எழுதினார். இந்த புத்தகத்தின் அறிமுக நிகழ்ச்சிக்காக கடந்த வாரம் ஹிலாரி இந்தியா வந்தார்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஹிலாரி அவர் தங்கியிருந்தபோது குளியலறையில் வழுக்கி விழுந்ததால் அவருக்கு கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து ஹிலாரி தனது இந்திய நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு அமெரிக்காவுக்கு திரும்பினார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *