shadow

high courtதமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு வழங்குவதில் பாரபட்சம் மற்றும் முறைகேடுகள் நடப்பதால், திரைப்படங்களுக்கு வரி விலக்கு வழங்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு வழங்கு தொடர்பாக தமிழக அரசு ஒரு ஆணை பிறப்பித்தது. ஆனால் அரசின் ஆணைகளை மதிக்காமல் ஒருசில நிறுவனங்கள் ஏமாற்றி வரிவிலக்கை பெற்றுவருவதாகவும், சில திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்காமல் அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் புகார்கள் வந்தன. இதனால் வழக்கறிஞர் மோட்சம் மற்றும் படத்தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி ஆகியோர் இந்த வரிவிலக்கு முறைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரணை செய்த தற்காலிகத் தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர்  தமிழில் பெயர் சூட்டும் படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது தொடர்பாக திருத்தம் கொண்டு வந்த அரசாணைக்கு இரண்டு வாரத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

Leave a Reply