மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், ஆளும் பா.ஜ.க. மொத்தம் உள்ள 230 இடங்களில் 150 முதல் 160 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு குளங்களில் தாமரை மலர் பூத்துள்ளது.
பாரதீய ஜனதா கட்சியின் சின்னம் தாமரை என்பதால் இந்த குளங்களில் பூத்துக்குலுங்கும் தாமரை பூக்கள் காங்கிரஸ் கட்சியினரிடம் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பூக்கள் தேர்தல் சமயத்தில் பா.ஜ கட்சியினருக்கு சாதகமாக மக்கள் வாக்களிக்க வித்திடுமென என எண்ணிய மாநில காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் அவர்கள் மத்திய பிரதேசத்தில் குளத்தில் பூத்துள்ள தாமரைகளை திரை போட்டு மறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரசாரின் கோரிக்கை அபத்தமாக உள்ளது. காங்கிரசின் சின்னம் கை என்பதால் நாட்டில் உள்ள எல்லாரது கைகளையும் மறைக்க வேண்டும் என்று நாங்கள் சொன்னால் அது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அப்படித்தான் இதுவும் உள்ளது என்று பா.ஜ.க.வினர் கூறியுள்ளனர்.

Leave a Reply