shadow

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’: டிரைலரை அடுத்து சற்றுமுன் வந்த அடுத்த அப்டேட்!

சிவகார்த்திகேயன் நடித்த ’ஹீரோ’ திரைப்படத்தின் டிரைலர் இன்று காலை வெளிவந்து இணையதளங்களில் ட்ரெண்ட் ஆனது என்பது தெரிந்ததே

இரண்டு நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரெய்லரில் சுவராஸ்யமான காட்சிகள் இருந்ததால் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் டிரைலரை பார்த்த ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியானதை அடுத்து சற்றுமுன் இந்த படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி உள்ளது

இந்த படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்த்து யு சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்பது தான் அந்த அடுத்த அப்டேட்

இந்த படம் யூ சான்றிதழை பெற்றதை அடுத்து குழந்தைகள் முதல் பெரியவர் வரை பார்க்க தகுதி உள்ள படம் என்பது உறுதியாகி உள்ளது

மேலும் இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் படத்தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *