11சென்னையில் நேற்று நள்ளிரவு பரவலாக  பலத்த காற்றுடன் திடீரென இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.  நள்ளிரவு  தொடங்கிய மழை  பயங்கர காற்றுடன் இன்று காலை வரை நீடித்து வருவதால் சென்னையின் முக்கிய சாலைகளில் மழைநீர் குளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளது.

சென்னையில் அக்னிநட்சத்திரம் முடிந்த பிறகும் கடந்த சனிக்கிழமை வரை வெயில் வாட்டி வதைத்த வேளையில், இந்த திடீர் மழை சென்னை மக்களை குளிரச்செய்துள்ளது. மேலும் பொதுமக்களுக்கு எவ்வித தொந்தரவும் இன்றி நள்ளிரவு மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

மேலும் இந்த மழை இன்னும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்க வாய்ப்பு உள்ளதென சென்னை வானிலை அறிக்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *