shadow

10பகலில் குட்டித்தூக்கம் போட்டால்தான், சிலருக்கு அன்றைய பொழுது பயனுள்ளதாக மாறியிருக்கும். அதுவும் வீடுகளில் இருக்கும் பெண்கள் என்றால் சொல்லவும் வேண்டாம். அவர்களின் அன்றாட பணிகளில் பகல் தூக்கமும் முக்கிய இடம் பிடிக்கும்.

ஆனால் பகலில் தூங்கும் பெண்களை மாரடைப்பு, வலிப்பு நோய் உள்ளிட்டவை விரைவாக எட்டிப்பார்ப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பகலில் தூங்கும் பழக்கத்தை கொண்ட சுமார் 84 ஆயிரம் அமெரிக்க பெண்களிடம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், அந்த பெண்களிடம் இதய சம்பந்தமான நோய்கள் உண்டாவதற்கான அறிகுறிகள் இருமடங்காக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் தூக்கம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும், இந்த ஆய்வு முடிவுக்கும் சம்பந்தமில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply