இன்றைய அவசர காலகட்டத்தில் நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் என்பதையே சமயத்தில் மறந்து விடுகிறோம்.

நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க, நம் உடம்பில் உள்ள முக்கிய அங்கம் தான் இதயம். மிகவும் முக்கியமான இந்த அங்கம் இரத்தத்தை உடல் முழுவதும் அனுப்புவதால் நம்மை ஆரோக்கியமாக வாழ வைக்கிறது.

நம் உயிர் நாடியாக விளங்கும் அப்படிப்பட்ட நம் இதயத்தை காத்திட பல வழிகள் உள்ளது. கீழ்க்கூறிய சில எளிய வழிகளைப் பற்றி படித்து தெரிந்து கொண்டால் உங்கள் உடலையும், துடிக்கும் உறுப்பையும் எப்படி ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வீர்கள்.

ஆரோக்கியமாக இருக்க ஏதாவது ஒரு உடற்பயிற்சியையாவது தினமும் செய்ய வேண்டும் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். உடற்பயிற்சி செய்தால் எடை குறைவதோடு, மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

அதற்கு எளிய சில வழிகளை பின்பற்றினால், இதயம் பாதுகாக்கப்பட்டு நீண்ட ஆயுளை பெறுவீர்கள். இன்றைய காலகட்டத்தில் பல பேர் பல இதய நோய்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். நாங்கள் கூறும் குறிப்புகளை தவறாமல் பின்பற்றினால், இவ்வகை நோய்களை எளிதில் விரட்டி அடிக்கலாம்.

* இதயத்தை பாதுகாக்கும் சிறந்த வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது நீச்சல் பயிற்சி. நீச்சல் அடிக்கும் போது இதயம் சுறுசுறுப்பாக செயல்படும். அது இதயத் துடிப்பிற்கு நல்ல பயிற்சியாக விளங்கும்.

* சில நேரம் இதயம் பலமாக துடிக்கும் போது அது கூட இதயத்தை திடமாக மாற்றும். எனவே இதயத்தை பாதுகாக்க ஒரு நல்ல பேய் படம் அல்லது திகில் படத்தை காணுங்கள்.

* உங்கள் திறன் மற்றும் எரிச்சல் என்று அனைத்தையும் ஒரு பஞ்ச்சிங் பேக்கில் காட்டுங்கள். இதுவும் உங்கள் இதயத்தை திடமாக வைத்திட உதவும்.

* தேனீரில் உள்ள ப்ளேவோனாய்ட்டுகள் இரத்த குழாய்களை மேம்படுத்தி அதனை ஓய்வெடுக்க வைக்கும். இதயத்தை ஆரோக்கியமாக வைக்க தினமும் இரண்டு கப் டீ குடியுங்கள்.

* மில்க் சாக்லெட்டை காட்டிலும், டார்க் சாக்லெட்டையே உண்ணுங்கள். டார்க் சாக்லெட்டில் கொக்கோ உள்ளது. இதில் ப்ளேவோனாய்ட்டுகள் அதிகம் உள்ளதால் அவை இரத்த உறைதலை தடுக்கும்.

* தியானக் கலையின் மூலம் நரம்பியல் அமைப்பை சாந்தப்படுத்தினால் இதயத்தை வால்வுநோய் மற்றும் இதயச்சுவர் சிரை நோய் என்று பல நோய்களில் இருந்து காக்கும்.

* இதயத்தை காத்திட ஏதாவது ஒரு உடற்பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள். இது இதயத்தை பல்வேறு நோய்களில் இருந்து காக்கும்.

* புத்தகம் படிக்கும் போது மனமானது அமைதி பெரும். ஆனால் இதயமோ புத்தகத்தின் அடுத்த பக்கத்தில் என்ன நடக்குமோ என்று பதைபதைக்கும். இப்படி செய்து இதயத் துடிப்பை அதிகரிப்பதால் இவ்வழியிலும் இதயத்தை காத்திடலாம்.

* வைட்டமின் பி அடங்கிய உணவுகள் இதயத்திற்கு மிகவும் நல்லது. அது இதய நோய்களை அண்ட விடாமல் தடுக்கும். அதற்கு அவகேடோ மற்றும் கடல் உணவுகளை சில எடுத்துக்காட்டுகளாக கூறலாம்.

* சில நேரங்களில் நரம்பியல் அமைப்பை சாந்தப்படுத்தும் காரியத்தில் ஈடுபட்டால், அது இதயத்திற்கு நன்மையை விளைவிக்கும். அப்படி ஒரு செயல் தான் மீன் பிடித்தல்.

* கோதுமை பிரட் மற்றும் ஓட்ஸ் ஆகியவைகள் இதயத்திற்கு சிறந்த உணவாக விளங்குகிறது. அதனால் அதனை உண்ணுவதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

* அனைத்து வகை நட்ஸ்களும் மனித உடலுக்கு நன்மையை விளைவிக்கும். இருப்பினும், உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் நட்ஸ் வகையை தவிர்க்கவும்.

* சூரியகாந்தி விதைகள் இதயத்திற்கு சிறந்த உணவுகளில் ஒன்றாகும். துடிக்கும் உறுப்பான இதயத்தை காத்திட இது பெரிதும் உதவும். மேலும் உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தவும், சூரியகாந்தி விதைகள் உதவுகிறது.

* மன அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைக்க எந்த தடங்கலும் ஏற்படாது. எனவே மன அழுத்தம் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்திடுங்கள்.

* ஒரு கிண்ணம் முழுவதும் பெர்ரி பழங்களை நிரப்பி, அதனை உண்ணுவதால், இதயம் காக்கப்பட்டு ஆரோக்கியத்துடன் இருக்கும். ஏனெனில் பெர்ரி பழங்களில் வைட்டமின் சி, ஏ மற்றும் டி அடங்கியுள்ளதால், அவை உடலுக்கு மிகவும் நல்லது.

* காய்கறி எண்ணெய் பயன்பாட்டை நிறுத்துங்கள். ஆலிவ் எண்ணெய் போன்ற மிதமான ஆரோக்கியமான எண்ணெயைத் தேர்ந்தெடுத்து ஆரோக்கியமான இதயத்தை பெற்றிடுங்கள்.

* இதயத்தை காத்திடும் நல்வழிகளில் ஒன்று தான் நட்பு வட்டாரத்தை பெருக்கி கொள்வது. தனிமை நம்மை கொன்றுவிடும். இதுவே நண்பர்கள் இருந்தால் அவர்கள் உங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்கி சந்தோஷப்படுத்துவார்கள்

* அதிகமாக இரும்புச்சத்து உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டும் கூட இதயத்தை பாதுகாத்திடலாம்.

* இதயம் வலுவிழக்க முக்கிய காரணமாக விளங்குவது எடை அதிகரிப்பு. ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, ஏதாவது உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

* புகைப்பிடிக்கும் பழக்கம் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும். இந்த பழக்கத்தை கைவிட்டால் ஆரோக்கியமாக வாழ ஒரு படி மேல் ஏறியிருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும்.

* அளவுக்கு அதிகமான சர்க்கரை, இதயத்திற்கு நல்லதல்ல. ஆகவே சர்க்கரையின் உட்கொள்ளுதல் அளவுடன் இருக்க வேண்டும் அல்லது சர்க்கரை இல்லாத ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.

* சோம்பேறித்தனமாக இருக்காதீர்கள். லிப்ட்டை பயன்படுத்துவதற்கு பதிலாக படிகளிலேயே ஏறிச் செல்லுங்கள். இது இதயத்திற்கு நல்ல பயிற்சியாக அமையும்.

* இதயத்தை ஆரோக்கியமாக வைக்க மற்றொரு வழி காதலில் விழுவது. அது உங்களை அனைத்து இதய நோயில் இருந்து பாதுகாக்கும். காதலில் விழும் போது, இதயத் துடிப்பு பல மடங்கு அதிகமாகவே துடிக்கும் அல்லவா?

* ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடினால், அது உங்களை ஆற்றலுடன் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். அதனால் இதயமும் பாதுகாக்கப்படும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *