shadow

30cb150c-b9bc-422d-b452-a674999b2860_S_secvpf

ஆந்திராவில் புளிச்ச கீரைக்கு தனி மதிப்பு உண்டு. கோங்குரா என்று அழைக்கப்படும் புளிச்ச கீரையின் காம்புகளும் தண்டும் சிவப்பு நிறத்தில் காணப்படும். உடல் உஷ்ணத்தை குறைத்து சமப்படுத்துவதில் புளிச்ச கீரைக்கு முக்கிய பங்குண்டு. இதன் இலைகள், மலர்கள் மற்றும் விதைகள் மருத்துவ குணம் கொண்டவை.

புளிப்புச் சுவை கொண்டுள்ள இந்தக் கீரையை அனைத்து வகையிலும் செய்து சாப்பிடலாம். ஆனால், புளியின் அளவைக் குறைப்பதே நல்லது. இரண்டு புளிப்பும் சேர்ந்து சுவையை மாற்றிவிடும். மேலும் இதனுடன் எள் சேர்த்தும் சாப்பிடலாம். வைட்டமின் மற்றும் இரும்புசத்து நிறைந்த புளிச்சகீரை உடலை வலிமையாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சத்து குறைவினால் நோஞ்சானாக தெரியும் குழந்தைகளுக்கு இந்த கீரையை தினமும் உணவோடு சேர்த்து கொடுத்து வர அவர்களின் உடல் புஷ்டியாகும். சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்த கீரையை சட்னியாக செய்து சாப்பிட்டால் தோல் தொடர்பான நோய்கள் குணமடையும். நீண்ட நாட்களாக மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த கீரையை தொடர்ந்து உட்கொண்டால் நாளடைவில் மலச்சிக்கலே ஏற்படாத வகையில் மறைந்துவிடும். வாத நோய்களை குணமாக்கும் தன்மை புளிச்ச கீரைக்கு உண்டு. உணவில் அதிக அளவு கீரைகள் சேர்ப்பது நல்லது.

சத்துக்கள்: வைட்டமின் பி, இ, சி, பொட்டாசியம் ஆகியவை உள்ளன. பலன்கள்: சரும வறட்சியைப் போக்கும். சருமம் அழகு பெறும். பசியின்மையைப் போக்கும். மந்தத்தை நீக்கும். சருமத்தில் உருவாகும் சிறு ரத்தக் கட்டிகளைப் போக்கும். ரத்த நாளங்களை சீர்செய்யும்.

டிப்ஸ்: சிறிது எண்ணெயில் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, கீரையை சேர்த்து பிரட்டி, உப்பு சேர்த்து அரைத்து, துவையலாக செய்து சூடான சாதத்தில் போட்டு சாப்பிடலாம். வயிறு மந்தம் நீங்கும். புளிச்ச கீரையை நீரில் கொதிக்கவிட்டு அந்த நீரைக் குடித்துவந்தால், உடலுக்குப் புத்துணர்வு கிடைக்கும்.

கவனிக்க: மூட்டுவலிப் பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்கலாம். இது பித்தத்தை அதிகப்படுத்தும் தன்மையுடையது என்பதால் பித்தம் சம்பந்தமுடையவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.

Leave a Reply