shadow

peerkangai_006

காய்கறிகள் நமது அன்றாட வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றது.

அதிலும் பச்சைகாய்கறிகளை சாப்பிடுவது ருசிக்கு மட்டுமின்றி அரோக்கியத்திற்கும் வழிவகுக்கும். அந்த பச்சை காய்கறிகளில் ஒன்றானது பீர்க்கங்காய்.

இதை நாம் வாடிக்கையாக உபயோக்கப்படுத்தாவிட்டாலும், வாரத்தில் ஒரு முறை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

பீர்க்கங்காயின் மகத்துவங்கள்

பீர்க்கங்காயில் நன்மை தரும் நார்ச்சத்து, வைட்டமின் சி, ரைபோபிளேவின், துத்தநாக சத்து, இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் உள்ளது.ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உள்ளது.

இதில் உள்ள இயற்கை சத்துக்கள் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது. பீர்க்கங்காயில் உள்ள பீட்டா குரோடீன் கண் பார்வைக்கு ஊட்டம் தரும்.

பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். மேலும் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும். வயிற்று தொந்தரவு களை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும்.

பீர்க்கு இலைச் சாறு பித்தத்தை போக்குவது மட்டுமின்றி ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும்.

சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம்.

கசப்புச் சுவை அதிகமாய் இருப்பதால் இதைச் சமைத்துத்தான் சாப்பிடுவதன் மூலம் தோல் நோய்கள் வராமல் இருக்கும்.

மேலும் இதன் இலைகளை அரைத்துப் புண்கள் உள்ள இடங்களில் கட்டினால் போதும். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது.

பீர்க்கங்காய் கஷாயம்

முதலில் பீர்க்கங்காய் வேரை எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு அதை இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி, அந்த தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியில் அந்த தண்ணீரை வாணலியில் வைத்து சிறிது நேரம் கொதிக்க வைத்தால் பீர்க்கங்காய் கஷாயம் ரெடி.

பயன்கள்

இந்த கஷாயத்தை பெரியவர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

மேலும் அடிக்கடி சோர்வடையும் தன்மை கொண்டவர்கள் இந்த கஷாயம் ஒரு சிறந்த மருந்து.

அதிக இரத்த சோகை இருப்பவர்கள் தினந்தோறும் ஒரு முறை இந்த கஷாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் இருக்கும்.

பீர்க்கங்காய் தோல் துவையல்

கடாயில் எண்ணெய் விட்டு பீர்க்கங்காய் தோலை நன்கு வதக்கி எடுக்கவும். வரமிளகாயை வறுத்து எடுக்கவும்.

பிறகு பூண்டு மற்றும் வெங்காயத்தை வதக்கி எடுக்கவும். கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, மல்லிவிதை, சீரகம் சேர்த்து வறுத்து, அதில் தேங்காய் சேர்த்து வதக்கி எடுத்தால் பீர்க்கங்காய் துவையல் ரெடி.

பயன்கள்

இந்த துவையல் உடலில் உண்டாகும் நோய்க்கிருமிகளை அழித்துவிடும்.

கண் பார்வை தெளிவு பெறவும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

உடலை வெப்பமடைய செய்யாமல் குளிச்சியாக வைக்க உதவும்

 

Leave a Reply