shadow

ஹவாய் தீவில் பயங்கர எரிமலை வெடிப்பு: சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஹவாய் தீவுகளின் ஹோனோலுலு என்ற பகுதியில் உள்ள கிலுயுயே என்ற எரிமலையில் நேற்று திடீரெனா வெடிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக நெருப்புடன் கூடிய புகை வெளியேறி வருகிறது. இதனால். சுமார் 6 மைல் உயரத்திற்கு புகை பரவியதோடு மேலும் பல மீட்டர் தூரத்திற்கு எரிமலை குழும்பு பரவி வருவதால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.

இந்த எரிமலை வெடிப்பினால் அந்த பகுதியில் உள்ள 37 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும்,எரிமலை குழம்புகள் அப்பகுதி முழுவதும் ஆக்கிரமித்த வண்ணம் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் 2000-க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளனா.

மேலும் சுற்றுலா பயணிகளுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா சென்றவர்கள் சோகத்துடன் திரும்புகின்றனர்.

Leave a Reply