Chennai Today News

அமெரிக்க அதிபர் வேடத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் விமான விபத்தில் காயம்.

இண்டியானா ஜோன்ஸ், ஸ்டார் வார்ஸ், ஏர் போர்ஸ் ஒன், போன்ற பல ஹாலிவுட் படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்டு இன்று அதிகாலை நடந்த விமானவிபத்து ஒன்றில் சிக்கி காயமடைந்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரில் சிறிய ரக விமானம் ஒன்றை ஓட்டிச் சென்ற ஹாரிசன், திடீரென ஏற்பட்ட எஞ்சின் கோளாறு காரணமாக நிலைகுலைந்ததாகவும், அவர் சென்ற விமானம் கோல்ப் மைதானத்தில் விழுந்து நொறுங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் ஹாரிசன் போர்டு அதிர்ஷ்டவசமாக சிறிய காயத்துடன் உயிர் தப்பியதாகவும், தற்போது சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக இருப்பதாகவும் அவருடைய மகன் பென் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த 1999-ம் ஆண்டு ஹாரிசன் போர்டு ஓட்டிச்சென்ற ஹெலிகாப்டர், சாண்டாகிளாரிட்டா அருகே விபத்துக்குள் சிக்கி லேசான காயத்துடன் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஹாரீசன் ஏர் போர்ஸ் ஒன் திரைப்படத்தில் அமெரிக்க அதிபர் கேரக்டரில் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!